அங்கன்வாடியில் படிக்கும் கலெக்டர் மகன்.. பொதுமக்கள் வரவேற்பு

Perambalur Collector Chooses Govt Anganwadi : பெரம்பலூர் விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் தனது மகளை சேர்த்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

Published on: July 10, 2026 at 1:12 pm

திருச்சி, ஜூலை 10, 2026: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி, தனது மகனை அரசு அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். கடந்த மாதம் ஆய்வின் போது, தானும் தனது மகனை அங்கன்வாடியில் சேர்ப்பேன் என்று பொதுமக்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று (வியாழக்கிழமை) பெரம்பலூர் விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் தனது இரண்டு வயது மகன் ஆத்விக்கை சேர்த்தார்.

ஆட்சியராக பொறுப்பேற்றவுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஷரண்யா அரி, அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அப்போதே, தானும் தனது குழந்தையை அரசு அங்கன்வாடியில் சேர்ப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.

அங்கன்வாடி மையத்தில் தனது மகனை சேர்த்த பிறகு, அவர் விளையாட்டுடன் கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் ஆகிய அனைத்தும் அரசு அங்கன்வாடிகளில் கிடைக்கின்றன என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று கூறினார்.

மேலும், குழந்தைகளுக்கான இத்தகைய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே அரசு அங்கன்வாடி மையங்களின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதையும் படிங்க : நெல்லையில் இரட்டைக் கொலை.. குற்றவாளி மீது துப்பாக்கிச் சூடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com