CM Vijay Karur Visit : கரூர் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
CM Vijay Karur Visit : கரூர் சென்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

Published on: July 10, 2026 at 12:03 pm
கரூர், ஜூலை 10, 2026: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். காலை 10.15 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியபோது, மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக கரூர் நோக்கி புறப்பட்டார். வழிநெடுகிலும் தவெக (TVK) கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். திருச்சி மாநகரில் முதல்வரின் பயணத்தடத்தில் சாலையோரம் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர் வசதிக்காக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
திருச்சி – புதுக்கோட்டை, திருச்சி – சென்னை மற்றும் திருச்சி – கரூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் தூய்மைப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சாலை, சென்னை பைபாஸ் சாலை, சஞ்சீவி நகர், குடமுருட்டி பாலம் மற்றும் கரூர் சாலை உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் முதல்வரை பார்க்க நான்கு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விமான நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்ட முதல்வர் விஜய், 11.30 மணிக்கு கரூர் மாவட்ட எல்லையை சென்றடைந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவிகள், மாணவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். இந்த பயணம், தமிழக வெற்றி கழகத்தின் வலிமையையும், பொதுமக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
இதையும் படிங்க : தமிழக விவசாயிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. மாம்பழங்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com