1990 Nurse Killing case : 1990 இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை வழக்கில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1990 Nurse Killing case : 1990 இல் காஷ்மீரி பண்டிட் செவிலியர் படுகொலை வழக்கில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Published on: June 30, 2026 at 1:22 pm
காஷ்மீர் ஜூன் 30 2026; ஜம்மு காஷ்மீரின் 1990-ஆம் ஆண்டு நடந்த காஷ்மீரி பண்டித் நர்ஸ் சர்லா பாட்டின் கடத்தல் மற்றும் கொலை வழக்கில், ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்ட் (JKLF) தலைவர் யாசின் மாலிக் மீது மாநில விசாரணை அமைப்பு (SIA) 737 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இது 36 ஆண்டுகளுக்குப் பிறகு நீதியை நோக்கி எடுத்த முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
வழக்கின் பின்னணி
1990 ஏப்ரல் மாதம், சர்லா பாட் என்ற காஷ்மீரி பண்டித் நர்ஸ், ஸ்ரீநகரில் உள்ள சேர் காஷ்மீர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (SKIMS) மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரண்ட் (JKLF) தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அடுத்த நாள், அவர் மால்பாக், ஓமர் காலனி பகுதியில் சித்ரவதை செய்யப்பட்டு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம், காஷ்மீரி பண்டித் சமூகத்தின் மீது நடந்த தொடக்ககால குறிவைத்த தாக்குதல்களில் ஒன்றாகும்.
இந்த வழக்கில், முகமது யாசின் மாலிக் மற்றும் அப்துல் ஹமீத் ஷேக், முகமது யூசுப் சோஃபி (Idrees), குலாம் முகமது தப்லூ ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது; இதில் யாசின் மாலிக் தவிர மற்ற மூவரும் உயிரிழந்து விட்டனர்.
இதையும் படிங்க; புனே தொழிலதிபர் வருங்கால கணவனை கொன்றது எப்படி? ஷாக் ஆன போலீசார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com