Vanathi Srinivasan: தமிழ்நாட்டில் பெண்களை போதையாகப் பார்க்கும் அவலத்தில் சமூகம் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Vanathi Srinivasan: தமிழ்நாட்டில் பெண்களை போதையாகப் பார்க்கும் அவலத்தில் சமூகம் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Published on: May 28, 2026 at 9:05 pm
சென்னை, மே 28 2026: தமிழ்நாட்டில் பெண்களை தாயாக, சகோதரியாக, மகளாக பார்த்த காலம் போய் இன்று போதையாகப் பார்க்கும் அவலத்தில் சமூகம் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
சென்னை வேளச்சேரியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த 61-வயது மூதாட்டியை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என தினமும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடப்பது தொடர்கதையாகிவிட்டது. இத்தகைய செயல்களுக்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
தமிழ்நாட்டில் பெண்களை தாயாக, சகோதரியாக, மகளாக பெண்களைப் பார்த்த காலம் போய் இன்று போதையாகப் பார்க்கும் அவலத்தில் சமூகம் மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. முதல்வர்
விஜய் அவர்களே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிவோருக்கு தண்டனைகளை கடுமையாக்கவும், அதனை உடனடியாக நிறைவேற்றவும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : நெல்லையில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது.. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com