எபோலா உன் ஆட்டம் இனி காலி.. தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா!

New Ebola Vaccine : எபோலா வைரஸ்-ஐ கட்டுப்படுத்த ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 28, 2026 at 10:35 am

மாஸ்கோ, மே 28, 2026: ரஷ்ய விஞ்ஞானிகள், எபோலா வைரஸின் புதிய வகைக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய தூதரகம் தென்னாப்பிரிக்காவில் அறிவித்துள்ளது.

ரஷ்ய சுகாதார அமைச்சர் மிஹாயில் முராஷ்கோ இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்தினார். விஞ்ஞானிகள், இந்த தடுப்பூசி அரிதான ‘புண்டிபுக்யோ’ வகைக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம், காங்கோ மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா பரவலை மே 17 அன்று சர்வதேச சுகாதார அவசர நிலை என அறிவித்தது. மேலும், உலக சுகாதார அமைப்பு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளை கடுமையாக பரிசோதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதில், புண்டிபுக்யோ வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களுக்கு பயணம் தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், இந்தியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து விமான நிறுவனங்களுக்கு செயல்முறை வழிகாட்டி நடைமுறைகள் வழங்கப்பட்டன.

அதில், உகாண்டா மற்றும் காங்கோவுடன் இணைந்துள்ள விமானங்கள், பயணிகள் இறங்கும் முன் சுய அறிவிப்பு படிவங்களை கட்டாயமாக சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது, பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி மிக முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 12 பேர் பலி

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!
US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com