1,000 அடி பள்ளத்தில் விழுந்த சொகுசு கார்.. பிரபல நடிகர் மரணம்!

Mahesh Pawar Tragedy : 1,000 அடி பள்ளத்தில் சொகுசு கார் விழுந்த நிலையில், அதில் இருந்த மராத்தி நடிகர் மகேஷ் பவார் பரிதாபமாக உயிரிழந்தார்.

Published on: May 28, 2026 at 10:36 am

Updated on: May 28, 2026 at 10:37 am

மும்பை, மே 28, 2026: மராத்தி நடிகர் மகேஷ் பவார் (25) உள்பட 8 பேர் சென்ற சொகுசு கார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் என்ற பகுதியில் நடந்துள்ளது.

25 வயதாக இந்த நடிகர், அப்பி அம்சி கலெக்டர் என்ற தொடரில் மூலம் பிரபலமானவர் ஆவார். இவரது மரணம் மராத்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் நடிகர் மகேஷ் பவார் தவிர ரிதேஷ் லோகாண்டே (22), சுஹாஸ் லோகாண்டே (20), உத்த்கர்ஷ் சிங்க்டே (21), நிகில் சிங்க்டே (25), மகேஷ் பவார் (25), ஆதித்யா சலுங்கே (21), ராஜேஷ் கட்ட்கர் (35), அன்ஷ் சவான் (19) உள்ளிட்டோரும் உயிரிழந்துள்ளனர்.

இதில், பெரும்பாலானவர்கள் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவரே ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஹர்னே (டாபோலி) பகுதியில் இருந்து பயணம் தொடங்கிவர்கள் ஆவார்கள்.

முதலமைச்சர் இரங்கல்

இந்த விபத்து குறித்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக 5 மீட்பு குழுக்களை அமைத்தது. என்.டி.ஆர்.எஃப் மற்றும் தன்னார்வ குழுக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன. இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : ஊர்வசி vs ஜெயராம்.. கொலை செய்தது யார்? பரபரக்கும், ‘பரிமளா அண்ட் கோ’!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com