Sai Pallavi: நடிகை சாய் பல்லவியின் குரல் டப் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Sai Pallavi: நடிகை சாய் பல்லவியின் குரல் டப் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: May 14, 2026 at 4:23 pm
சென்னை, மே 14, 2026: சாய் பல்லவி நடித்த ‘ஏக் தின்’ படம் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘ராமாயணா’ படக்குழு அவரின் குரலை டப் செய்யும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. சீதா மாதாவின் கதாபாத்திரத்திற்கு மிகச் சுத்தமான ஹிந்தி உச்சரிப்பு தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் சாய் பல்லவி, சிதா மாதாவாக நடிக்கிறார். இந்நிலையில், அவரின் ஹிந்தி உச்சரிப்பு ‘ஏக் தின்’ படத்தில் விமர்சிக்கப்பட்டது. இதனால், ராமாயணா படக்குழு அவரது குரலை டப் செய்ய தீர்மானித்துள்ளது.
விமர்சனம்
இதற்கிடையில், பல ரசிகர்கள், “சீதா தேவி கதாபாத்திரத்திற்கு ஹிந்தி உச்சரிப்பு மற்றும் மொழி ஆளுமை இல்லாதவர் ஏன் தேர்வு செய்யப்பட்டார்?” என்று கேள்வி எழுப்பினர்.
சிலர், “அவரது நடிப்பு திறமை சிறந்தது, ஆனால் மொழியில் சிக்கல் இருந்தது. இதில் கவனமாக இருக்க வேண்டும்” என ஆதரித்தனர்.
ராமாயாண படத்தில் ரன்பீர் கபூர் – ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், நடிகர் யஷ் – இராவணன் கதாபாத்திரத்திலும், சன்னி தியோல் ஹனுமான் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க : விஜய்- சங்கீதா முதல் ஹன்சிகா வரை.. 2026ல் ஸ்டார் நட்சத்திரங்கள் பிரிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com