ரூ.10 கோடி இலக்கு.. 20 வயதில் எவ்வளவு எஸ்.ஐ.பி முதலீடு தேவை? ஓர் பார்வை!

Mutual Fund: மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், 20 வயதான முதலீட்டாளர்கள் ரூ.10 கோடிகள் வரை திரட்ட எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: May 14, 2026 at 3:48 pm

சென்னை, மே 14, 2026: உங்கள் வயதுக்கேற்ப மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மாறுபட வேண்டும். 20-களில் அதிக ஆபத்து எடுத்து அதிகம் முதலீடு செய்வது நல்லது. 30-களில் சமநிலை அணுகுமுறை தேவை, 40-களில் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் முக்கியமாக உள்ளது.

20 வயதில் முதலீடு

மாத வருமானத்தின் 20–30% வரை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அதிலும், ஃப்ளெக்ஸி கேப், மிட்கேப், இன்டெக்ஸ் ஃபண்ட்கள் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் போன்ற வளர்ச்சி சார்ந்த ஃபண்டுகள் ஏற்றவை ஆகும். உதாரணமாக மாதம் ₹10,000 எஸ்.ஐ.பி, 12% வருமானம் எனக் கணித்தால், 40 ஆண்டுகளில் ₹11.88 கோடி வரை சேர்க்கலாம்.

30 வயதில் முதலீடு

வருமானம் அதிகரிக்கும், ஆனால் வீட்டு கடன், திருமணம், குழந்தைகள் கல்வி போன்ற பொறுப்புகள் அதிகரிக்கும். ஆகவே, 50–60% ஈக்விட்டி ஃபண்ட்கள், 40–50% ஹபிரிட் கோல்டு ஃபண்ட்கள் என்ற சமநிலை அணுகுமுறை தேவை.இ.எல்.எஸ்.எஸ் மூலம் வரி சேமிப்பு செய்யலாம். இதில், முக்கியமாக நீண்டகால வளர்ச்சியுடன், பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும்.

40 வயதில் முதலீடு

ஓய்வூதிய திட்டமிடல் முக்கியம்; லார்ஜ் கேப், ஹைபிரிட் டெப்ட் ஃப்ணட்களை அதிகளவில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஃப்ளெக்ஸி கேப் vs ஃபோகஸ்டு மியூச்சுவல் ஃபண்ட்.. நீண்ட கால முதலீடுக்கு எது உகந்தது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com