Iran vs Israel | ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
ஹிஸபுல்லாவை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலரின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், சர்வதேச நேரப்படி இரவு 10.08 மணிக்கு ஏவுகணைகள் “சிறிது நேரத்திற்கு முன்பு” ஏவப்பட்டதாகக் கூறியது.
இந்த ஏவுகணையை ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதற்கிடையில், 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், “ஏவுகணைகள் குண்டு மழை பொழிவதை வீடியோக்கள் காட்டின. “ஜெருசலேம் மற்றும் பிற இடங்களில்” குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் உறுதிப்படுத்தின. இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் தாக்குதல் தொடர்கிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.18, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rajinikanth next Film: 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் சுந்தர் சி இணைகிறார்….
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்