Karthi P Chidambaram | சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம் சென்னையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளது” என்றார். மேலும் பேசிய கார்த்தி, “ஹரியானாவில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னமும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அங்கு தேர்தல் நடக்கும்போது அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.
மகாராஷ்டிராவில் நவ.26ஆம் தேதிக்கு முன்னதாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனை தலைமை தேர்தல் ஆணையரே உறுதிப்படுத்தியுள்ளார். இங்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவா காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது” குறிப்பிடத்தக்கது.
வம்ச அரசியல் சலிப்பான வாதம்
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், “முதல்வர் எடுத்த முடிவு அவரது உரிமைக்கு உட்பட்டது. யாரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும், கைவிடவும், பதவி உயர்வு அளிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. முதல்வர் தனது உரிமைக்கு உட்பட்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். வம்ச அரசியல் என்பது ஓர் சலிப்பான வாதம்” என்றார்.
இதையும் படிங்க
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது….
IAS Transfer | தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க…
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்