Iran vs Israel | ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் இருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.
ஹிஸபுல்லாவை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலரின் உயர் அதிகாரி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம், சர்வதேச நேரப்படி இரவு 10.08 மணிக்கு ஏவுகணைகள் “சிறிது நேரத்திற்கு முன்பு” ஏவப்பட்டதாகக் கூறியது.
இந்த ஏவுகணையை ஈரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதற்கிடையில், 100 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், “ஏவுகணைகள் குண்டு மழை பொழிவதை வீடியோக்கள் காட்டின. “ஜெருசலேம் மற்றும் பிற இடங்களில்” குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளும் உறுதிப்படுத்தின. இதுவரை உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானின் தாக்குதல் தொடர்கிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
Vijay questions in Vengaivayal case |வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்….
Personal loans interest rates: பெர்ஷனல் லோன் தேவைப்படும் நபர்கள் இந்த 6 வங்கிகளின் வட்டி விகிதங்களை செக் பண்ணவும். இதில் நாட்டின் முன்னணியில் உள்ள 6…
டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 5 பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் இங்குள்ளனர். முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது யார் தெரியுமா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்