IPL 2026 ; ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
IPL 2026 ; ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Published on: May 7, 2026 at 1:56 pm
ஹைதராபாத், மே 07 2026: ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. ஹெய்ன்ரிக் கிளாசன் 43 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
236 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கூப்பர் கொன்னோலி 59 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் ஷிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாட் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இன்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அட்டல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேல்ன்ஜர்ஸ் பெங்களூரு அணியை, எதிர்கொள்ள உள்ளது. போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்கும்.
இதையும் படிங்க : ICC தரவரிசை வெளியீடு.. முதலிடத்தில் தொடரும் இந்தியா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com