Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க ஆதரவு அளிப்பது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை அறிவிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க ஆதரவு அளிப்பது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை அறிவிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: May 7, 2026 at 5:20 pm
சென்னை, மே 07 2026: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அவர் இன்று மீண்டும் ஆளுநர் விஸ்வனாத் அர்லேகரை லோக் பவன் மாளிகையில் சந்தித்தார்.
ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்புக்கு பிறகு ஆளுநர் கேரளாவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றுவும் விஜய் ஆளுநரை சந்தித்து, தனது கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தையும் வழங்கியிருந்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு மேலும் ஆதரவு தேவைப்படும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை நடைபெறும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகே விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், இடதுசாரி கட்சிகள் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதையும் படிங்க : வி.சி.க.வுக்கு கடிதம் அனுப்பிய விஜய்.. வி.சி.க நிலைபாடு என்ன? ரவிக்குமார் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com