திமுக சின்னம் பொறித்த டி-ஷர்ட்; உதயநிதி ஆடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!

Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published on: October 29, 2024 at 2:36 pm

Udhayanidhi T-Shirt Issue | சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம் சத்திய குமார் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், ” அரசு விழாக்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பொறித்த டீ சர்ட் உடன் கலந்து கொள்கிறார்.

இதன் மூலம், 2019 ஆம் ஆண்டு மாநில அரசு பிறப்பித்த அதிகாரப்பூர்வ ஆடை குறியீட்டை அவர் மீறுகிறார். ஆகவே அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் உரிய ஆடையில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின், டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்று விளக்கமளித்தார். இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? டி சர்ட் கேஷுவல் உடையா? அரசியலில் சட்ட பதவிக்கள் வகிப்பவர்களுக்கு இந்த ஆடை கட்டுபாடு உள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இதற்கு பதில்மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க விஜய் முதல் அரசியல் மாநாடு; உதயநிதி கொடுத்த ரீப்ளே: என்ன தெரியுமா?

குமரிக் கடலில் சூறாவளி காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு!
Meteorological Department predicted cyclonic winds may blow in the Kumari Sea

குமரிக் கடலில் சூறாவளி காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com