2004க்கு பிறகு முதல் முறை.. ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதில் இல்லாமல் ஒப்புதல்!

Ruckus in Lok Sabha: வரலாற்றில் முதல் முறையாக, ஜனாதிபதி உரைக்கு பிரதமர் பதிலளிக்காமல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Published on: February 5, 2026 at 9:38 pm

புதுடெல்லி, பிப்.5, 2026: 2004க்குப் பிறகு முதல் முறையாக, பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை, பிரதமரின் பதில் இல்லாமல், மக்களவையில் வியாழக்கிழமை (பிப்.5, 2026) நிறைவேற்றப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 28 அன்று குடியரசுத் தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு புதன்கிழமை பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர்ந்து நடந்த இடையூறு மற்றும் கோஷங்களால், சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியபோதும், வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய மக்களவை அமர்வு, I.N.D.I.A கூட்டணியின் எம்.பி.க்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை குறிவைத்து கோஷம் எழுப்பியதால் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உரையாற்றும் உரிமை மறுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.

2020 இந்திய-சீன எல்லை மோதல் குறித்து ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத நினைவுக் குறிப்பை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் மேற்கோள் காட்ட அனுமதிக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3, 2026) மக்களவையில் மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேஷன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2004ல் மன்மோகன் சிங்

முன்னதாக 2004ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பாரதிய ஜனதா அவர் உரை நிகழ்த்த இடைஞ்சல் செய்ததாக கூறி அவர் பேச்சை தொடர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீக்கிய அமைச்சரை துரோகி என்ற ராகுல்.. நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

அலைகளின் விதி: இந்தியாவும் இஸ்ரேலும் முறிக்க முடியாத கூட்டாண்மையை ஏன் உருவாக்க வேண்டும்? டாக்டர் சி. எஸ். துபே India-Israel Partnership

அலைகளின் விதி: இந்தியாவும் இஸ்ரேலும் முறிக்க முடியாத கூட்டாண்மையை ஏன் உருவாக்க வேண்டும்?

India-Israel Partnership : இந்தியாவின் 7,500 கிலோமீட்டர் நீளக் கடற்கரை சர்வதேசத் துறைமுகங்கள், சுற்றுலா, கடல்சார் வர்த்தகம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை…

பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு: சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை Bengaluru Tech Summit 2026

பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு: சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை

Bengaluru Tech Summit 2026 : பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு தொடர்பாக, சென்னையில் தொழில்துறையினருடன் கர்நாடக அரசு ஆலோசனை நடத்தினார்கள்….

பீட்ஸ் 360 அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்! Beats 360 Headphones

பீட்ஸ் 360 அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!

Beats 360 Headphones: இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான பீட்ஸ் (Beats) நிறுவனம் புதிய பீட்ஸ் 360 ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது….

காத்திருக்கும் அதிர்ஷ்டம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு யாருக்கு? Kerala Lottery Result Today

காத்திருக்கும் அதிர்ஷ்டம், ரூ.1 கோடி லாட்டரி பரிசு யாருக்கு?

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 70 முடிவுகள் இன்று (செப்.23, 2026) வெளியாகின்றன….

ஆக்சர் படேல் வீசிய ஓவரில் ‘வைட்’முடிவு திரும்பப் பெறப்பட்டது சரியா? ஐசிசி விதிகள் சொல்வது என்ன? Axar Patel

ஆக்சர் படேல் வீசிய ஓவரில் ‘வைட்’முடிவு திரும்பப் பெறப்பட்டது சரியா? ஐசிசி விதிகள்

Axar Patel: இந்தியா–ஜப்பான் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான டி20 போட்டியில், கடைசி ஓவரில் ஆக்சர் படேல் வீசிய பந்து ‘வைட்’ என முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த…

தென்ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. கர்ப்பிணி உள்பட 11 பேர் படுகொலை! Durban Township Gun Attack

தென்ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. கர்ப்பிணி உள்பட 11 பேர் படுகொலை!

Durban Township Gun Attack: தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஒரு டவுன்ஷிப் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 11 பேர்…


Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com