சென்னை பிப்ரவரி 5, 2026; பிரதமர் நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, பங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறத்தமட்டில், சட்டமன்ற பொது தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக சென்னை அருகே மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி திமுக அரசின் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விமர்சித்திருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக முக ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி வருகை தர உள்ளார்.
இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என தெரிவித்திருந்தார்.
எனினும் இதுவரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு முன்னர் இவர்கள் கூட்டணி தொடர்பாக தங்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தமட்டில் பல்வேறு கோரிக்கைகள் வைப்பதாகவும் இதனால் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணி பேசுவதில் வேகம் காட்ட வில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியை பொருத்தமட்டில் அது தற்போது உள்கட்சி பிரச்சனை காரணமாக அன்புமணி ராமதாஸ் ஊரணியாகவும் ராமதாஸ் மற்றொரு அணியாகவும் திகழ்கின்றனர். இந்த கட்சியை பொருத்தமட்டில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்து விட்டார். இதனால் ராமதாஸ் வேறு கூட்டணியை நாடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் தங்களது கூட்டணி தொடர்பை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும், ஆட்சியை தக்க வைக்க திமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதையும் படிங்க; கமல்ஹாசன் முதல் உரை.. வெடித்தது சர்ச்சை.. என்ன பேசினார் கமல்- நிர்மலா சீதாராமன்?
EPS Holds Key Meet : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
Tiruvallur Tragedy : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவு சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும்…
MDMK Meet on June 26 : மறுமலர்ச்சி திமுக உயர்நிலைக் குழு கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள தலைமை நிலையம் தாயகத்தில்…
Force Motors Feat : ஃபோர்ஸ் மோட்டார்ஸ், புனேவில் உள்ள சக்கான் ஆலையில் 2,00,000-வது மெர்சிடிஸ்-பென்ஸ் இன்ஜினை தயாரித்து முக்கிய உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. 1997 முதல்…
Samantha : நடிகை சமந்தா கர்ப்பம் தரித்திருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன….
PM-KISAN Scheme : பிரதமர் நரேந்திர மோடி, PM-KISAN திட்டத்தின் 23-வது தவணையாக ரூ.18,880 கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) மூலம் 9.44 கோடிக்கும் மேற்பட்ட…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்