அதிதி- அர்ஜூன் தாஸ் ரொமாண்டிக் லவ் ஸ்டோரி.. ஒன்ஸ்மோர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Once More: ‘ஒன்ஸ் மோர்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Published on: August 5, 2026 at 4:07 pm

சென்னை, ஆக.5, 2026: வரவிருக்கும் தமிழ் காதல் திரைப்படமான ‘ஒன்ஸ் மோர்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இதகுறித்து அவர், “இரு கதாபாத்திரங்களும் காதலில் விழுவதோடு, அவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வட்டமும் முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்டவை. இந்த இரு உலகங்களும் சந்திக்கும் போது நிகழும் சம்பவங்களே கதையின் மையமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

இப்படம் ஜூலை 2024-ல் அறிவிக்கப்பட்டு, அதன்பின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆரம்பத்தில் கோடைக்கால வெளியீடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அர்ஜுன் மற்றும் அதிதியுடன் சோனா ஒலிக்கல் என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை இயக்குநர் விக்னேஷே எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், படத்தொகுப்பாளர் நஷ் மற்றும் கலை இயக்குநர் ராஜ் கமல் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

யுவராஜ் கணேசன் தனது ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் காதல், குடும்பம் மற்றும் சமூக வட்டாரங்களின் மோதல்களை மையமாகக் கொண்டிருப்பதால், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அர்ஜுன் தாஸ் கடைசியாக ‘கான் சிட்டி’ எனும் நகைச்சுவை கலந்த கொள்ளைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடித்திருந்தார். அதிதி சங்கர் ‘நேசிப்பாயா’ (2025) படத்திலும், தெலுங்கில் ‘பைரவம்’ (2025) படத்திலும் நடித்துள்ளார். இவர்களின் இணை நடிப்பால் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : தயாரிப்பாளராக களமிறங்கும் ஷாலினி.. ஏகே 64 படத்தின் டைட்டில் வெளியீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com