நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது.. அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்!

Arun Raj Reiterates NEET Opposition : நீட் தேர்வ மாநில உரிமை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எதிரானது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

Published on: May 20, 2026 at 6:03 pm

சென்னை, மே 20, 2026: தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அருண் ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான அரசின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். “நீட் மாநில உரிமைகளுக்கும் ஏழை மக்களுக்கும் எதிரானது என்பதால், இந்தத் தேர்வை ஆதரிக்க முடியாது” என்றும் அமைச்சர் அருண் ராஜ் தெளிவுபடுத்தினார். இது குறித்து மேலும் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், “நீட் தேர்வை நாங்கள் ஆதரிக்கவில்லை; இது மாநில உரிமைகளுக்கும் ஏழை மக்களுக்கும் எதிரானது.

மத்திய அரசு செயற்கையாக உருவாக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தமிழக அரசு உறுதியாக நிற்கும்” அவர் அவர் வலியுறுத்தினார்.

அரசு மருத்துவமனைகளில் மாற்றம்

மேலும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுபவம் மற்றும் சிகிச்சை தரம் மேம்பட வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என அவர் கூறினார். தொடர்ந்து, சிகிச்சை தரத்தை போர்க்கால அடிப்படையில் உயர்த்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்.எம்.சி) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், “இது எனது கல்லூரி; நான் இங்குதான் மருத்துவம் பயின்றேன். மீண்டும் வந்திருப்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தனது கல்வி நிறுவனத்திற்கே மீண்டும் வந்திருப்பது தனிப்பட்ட மகிழ்ச்சி என தெரிவித்தார்.

இதையும் படிங்க :அயோத்திதாச பண்டிதரின் 181வது பிறந்தநாள்.. முதலமைச்சர் விஜய் மரியாதை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com