நீட் போராட்ட மாணவர்களுக்கு குட் நியூஸ்… வழக்குகள் ரத்து.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!

NEET Protest Cases: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

Published on: August 2, 2026 at 2:40 pm

சென்னை, ஆகஸ்ட் 2, 2026: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ. ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் உத்தரவின்படி, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்றும், இதுகுறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவை எடுத்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றியை அமைச்சர் அ. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து சி.ஜே.பி. நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கு சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றை திரும்பப் பெறும் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திடீர் பலத்த காற்று… கவிழ்ந்த படகு.. தத்தளித்த 7 மீனவர்கள்… நடுக்கடலில் நடந்தது என்ன?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com