ஏற்றம் கண்ட பங்குச் சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி எப்படி?

Markets End in Green : இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

Published on: May 20, 2026 at 6:14 pm

மும்பை, மே 20, 2026: இந்தியப் பங்குச் சந்தை இறுதிக்கட்ட கொள்முதல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கூர்மையான ஏற்றம் காரணமாக இன்று (புதன்கிழமை) மீண்டன. கடந்த இரு தின இழப்புகளை மீட்டெடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தன.

இந்நிலையில், மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ) சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் (0.16%) உயர்ந்து 75,318.39 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ) நிஃப்டி 41 புள்ளிகள் (0.17%) உயர்ந்து 23,659 புள்ளிகளில் நிலைபெற்றது. மேலும், இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 671 புள்ளிகள் வரை சரிந்திருந்தன.

நிறுவனங்களின் நிலை

இதற்கிடையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.83% உயர்வு கண்டது. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ், ட்ரென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை லாபம் ஈட்டின.
இந்த நிலையில், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகியவை பின்னடைவை சந்தித்தன. கச்சா எண்ணெய்யை பொறுத்தமட்டில், பிரென்ட் கச்சா எண்ணெய் 2% சரிந்து, ஒரு பீப்பாய் $109-க்கு விற்பனையாகியது.

ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் இருந்தன; அமெரிக்க சந்தைகள் செவ்வாயன்று சரிவுடன் முடிந்தன.

இதையும் படிங்க : ரூ.4 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டம்.. முத்தூட் ஃபின்கார்ப் ஐ.பி.ஓ ரெடி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com