Muthoot Plans Big IPO : முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம், முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் ரூ.4 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
Muthoot Plans Big IPO : முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம், முதல் பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) மூலம் ரூ.4 ஆயிரம் கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

Published on: May 19, 2026 at 12:52 pm
திருவனந்தபுரம், மே 19, 2026: முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம் ரூ.4,000 கோடி மதிப்பிலான ஐ.பி.ஓ வெளியீட்டை அங்கீகரித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் சி.இ.ஒ ஷாஜி வர்கீஸ் கூறுகையில், “குறைந்தது 10% பங்குகளை அளிக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனம் இந்த ஐ.பி.ஓ மூலம் நிறுவனம் வளர்ச்சி மூலதனத்தை திரட்ட விரும்புகிறது.
இந்த ஐ.பி.ஓ.வின் அளவு ரூ.4 ஆயிரம் கோடிகள் ஆகும். இதில், ₹10 மதிப்புள்ள பங்குகளை ₹2 மதிப்புள்ள 5 பங்குகளாகப் பிரித்தலும் அடங்கும். அதன்படி, 2026 ஜூலை – 2027 ஜூன் காலத்தில் ரூ.4,000 கோடி என்.சி.டி வெளியீடு திட்டமும் உள்ளது.
முத்தூட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,640 கோடி (FY25-இல் ரூ.787 கோடி) ஆக காணப்படுகின்றது. அதேநேரம், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம், ரூ.1,847.62 கோடியாக காணப்படுகின்றது.
மேலும், நிறுவனத்தின் லாபம் ரூ.11,227.80 கோடியாக (32% உயர்வு) காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பங்குச் சந்தையை மீட்ட காளை.. ஆரம்ப அமர்வு வர்த்தகம் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com