பங்குச் சந்தையை மீட்ட காளை.. ஆரம்ப அமர்வு வர்த்தகம் எப்படி?

Markets Open Strong : இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வான நிலையில் ஆரம்ப கால வர்த்தகத்தை தொடங்கின.

Published on: May 19, 2026 at 11:53 am

மும்பை, மே 19, 2026: இந்திய பங்குச்சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வலுவாக தொடங்கியது. நிப்டி 23,700-ஐ மீண்டும் எட்டியுள்ளதுடன், சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்ந்துள்ளது. எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (OMCs) மற்றும் அடானி குழும பங்குகள் அதிகளவில் உயர்ந்துள்ளன.

இந்நிலையில், நிஃப்டி 50, 23,700-ஐ மீண்டும் எட்டியது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்-ஐ பொறுத்தமட்டில், 200 புள்ளிகள் உயர்ந்து 75,449.32-க்கு சென்றது. இதற்கிடையில், பேங்க் நிஃப்டி 54,000 நோக்கி நகரும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மத்தியில், இந்தியா வி.ஐ.எக்ஸ் அதிகரித்துள்ளதால் சந்தை அதிர்வுகள் தொடரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உலகளாவிய தாக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் தாக்குதல் திட்டத்தை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் விலை $109.11-க்கு குறைந்தது. இந்த நிலையில், ஆசிய சந்தைகள் கலவையான நிலையை காட்டின. ஜப்பான் நிக்கெய் 1% உயர்வு கண்டது. மறுபுறம், கொரியா கோஸ்பி 2% வீழ்ச்சி கண்டது.

இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?

தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ.. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?
Share Market Today

தேசிய பங்குச் சந்தை ஐ.பி.ஓ.. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை
SpaceX Tops Amazon

விண்வெளியில் மட்டுமல்ல… சந்தை மதிப்பிலும் பறக்கும் ஸ்பேஸ்X.. அமேசானை பின்னுக்குத் தள்ளி சாதனை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com