Minister Prabhu : தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Minister Prabhu : தமிழ்நாட்டில் உள்ள கல்குவாரிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: May 22, 2026 at 8:48 pm
சென்னை, மே 22, 2026: தமிழக கனிம வளங்கள் துறை அமைச்சர் பிரபு, மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த அமைச்சர் பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதில், விதிகளை மீறி அதிகமாக கற்களை வெட்டி எடுத்த குவாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளையும் ஆய்வு செய்து, உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
கல்குவாரிகள் நிலை
தமிழ்நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசு அனுமதியுடன் செயல்படுகின்றன. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
விதிமுறைகள்
மத்திய அரசின் சிபா கமிட்டி – கற்கள் வெட்டும் அளவை குறித்த விதிமுறைகளை வகுத்துள்ளது. எனினும், பெரும்பாலான குவாரிகள் இதை கடைப்பிடிக்கவில்லை. இதை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும், அது முறையாக செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
அமைச்சர் பிரபு உத்தரவு
இந்நிலையில் அமைச்சர் பிரபு, அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு நிர்ணயித்த அளவுக்குள் கற்கள் வெட்டப்படுகிறதா என்பதை அதிகாரிகள் துரிதமாக ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், அனுமதி பெற்ற குவாரிகள் எத்தனை? அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகள் எத்தனை? என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, விதிகளை மீறிய குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : என் வீட்டுத் தென்னை..எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்.. விசிக மீது ஆ. ராசா விமர்சனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com