சென்னை, ஜூலை 7, 2026: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது இரு தொகுதி வெற்றியையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் நான்கு தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பெரம்பூர் தொகுதியில் விஜயின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து, அங்கு போட்டியிட்ட முன்னாள் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனி தேர்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பின்னர் நடைபெறும் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் ஈ.வி. வேலு ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்களிலும், மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அனைத்து தேர்தல் மனுக்களும் அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
இதையும் படிங்க : ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என த.வெ.க-வை விமர்சித்திருக்கிறோம்.. தொல். திருமாவளவன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்