‘₹100 கோடி வரை பேரம்… வரவில்லை என்றால் கொலை மிரட்டல்’.. த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

TVK MLA’s Bribery Claim: தி.மு.க.வில் இணைய ரூ.30 கோடி முதல் ரூ.100 கோடி வரை பணம் வழங்க முன்வந்ததாகவும், மறுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஸ்ரீவைகுண்டம் தொகுதி டி.வி.கே. எம்.எல்.ஏ. ஜி. சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Published on: July 7, 2026 at 1:56 pm

தூத்துக்குடி, ஜூலை 7 2026: ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (TVK) எம்.எல்.ஏ. ஜி. சரவணன், தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வில் சேருமாறு தமக்கு ரூ.30 கோடி, ரூ.50 கோடி, ரூ.100 கோடி வரை பணம் வழங்க முன்வந்ததாகவும், அந்த அழைப்பை நிராகரித்த பிறகு தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், தாம் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்த சரவணன், ரூ.30 கோடி பேரம் தொடர்பான உறுதியான சான்றுகள் தம்மிடம் உள்ளதாகவும் கூறினார். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளரும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் நால்வரும் இதுதொடர்பாக தம்மை அணுகியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தம்மை கொலை செய்வதாகவும் மிரட்டியதாக கூறிய அவர், எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கே வந்து மிரட்டியதுடன், காரில் பயணம் செய்யும் போது லாரி மோதி விபத்து ஏற்படுத்துவோம் என்றும் கூறியதாக தெரிவித்தார்.

தான் ஒரு சாதாரண, அடித்தட்டுப் பின்னணியிலிருந்து எம்.எல்.ஏ.வாக உயர்ந்ததால், தன்னை எளிதில் மிரட்டலாம் அல்லது விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்றனர். மேலும், சுமார் 25 நாட்களுக்கு முன்பு தாம் காரில் சென்றபோது ஒரு லாரி திட்டமிட்டு தங்கள் வாகனத்தை நோக்கி மோதுவது போல் வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழக அரசியல் வட்டாரத்தில் எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி நடைபெறுவதாக த.வெ.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ‘குதிரை பேரம்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், சரவணனின் இந்த குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :கரூர் பயணம் விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு எதிரான தி.மு.க. மனு இன்று விசாரணை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com