சென்னை, ஜூலை 6, 2026: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பேசிய தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆளும் கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், த.வெ.க-வை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை எனவும், அதனை எதிர்த்து தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
திருமாவளவன், தி.மு.க கூட்டணியில் வி.சி.க போட்டியிட்டது என்பதை சுட்டிக்காட்டினார். “ஆட்சியில் பங்கு என்றதும் கட்டிப்பிடித்து உருள முடியுமா?” என கேள்வி எழுப்பிய அவர், வி.சி.க தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க அமோக வெற்றிப் பெற்று ஆளும் கட்சியாக வந்தது. அதேசமயம், தி.மு.க படுதோல்வி அடைந்தது. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் த.வெ.க வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.
திருமாவளவன், தி.மு.க தோல்வி மற்றும் த.வெ.க வெற்றி குறித்து பேசும்போது, தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகியுள்ளன எனக் குறிப்பிட்டார். வி.சி.க, தி.மு.க கூட்டணியில் இருந்தாலும், த.வெ.க ஆட்சிக்கு எதிராக தனது விமர்சனங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : செங்கல்பட்டு செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் ஆய்வு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்