Power outage in Tisaiyanvilai : திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8, 2026) மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Power outage in Tisaiyanvilai : திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 8, 2026) மின்சார விநியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: July 6, 2026 at 10:48 am
திருநெல்வேலி, ஜூலை 6, 2026: திசையன்விளை துணைமின் நிலையங்களில் வரும் ஜூலை 8, 2026 புதன்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த பராமரிப்பு பணிகள், மின்சார விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் இடையூறு இல்லாமல் மக்கள் பயன்பெறவும் செய்யப்படுகின்றன. பராமரிப்பு காலத்தில், மின்சார உபகரணங்கள் மற்றும் இணைப்புகள் சோதனை செய்யப்படுவதோடு, தேவையான திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான் மொழி, கரைசுத்து உவரி, கூட்டபணை, கூடுதாளை, குட்டம், விமணங்குடி ஆகிய ஊர்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த பகுதிகள். இந்த இடங்களில் வசிக்கும் மக்கள், அன்றைய தினம் மின்சார பயன்பாட்டில் ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு, பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளை திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன், மின்விநியோகம் வழக்கம்போல் மீண்டும் வழங்கப்படும்.
இதையும் படிங்க : சென்னையில் 41 மின்சார ரயில்கள் ரத்து… பயணிகள் கடும் அவதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com