சீனாவில் பயங்கர நிலச்சரிவு… 16 பேரை மண்ணுக்குள் புதைத்த கனமழை!

China Landslide Tragedy : சீனாவின் ஹுபேய் மற்றும் கான்சு மாகாணங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.

Published on: July 7, 2026 at 12:35 pm

பெய்ஜிங், ஜூலை 7, 2026 : சீனாவின் ஹுபேய் மற்றும் கான்சு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் கரைபுரண்டு வெள்ளம் ஏற்பட்டதுடன், நகரங்கள் நீரில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மக்கள் வீடுகள் புதையுண்டன.

கான்சு (Gansu) மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் குறைந்தது 16 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட உடனேயே மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரகால மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். கனமழை மற்றும் சேறு காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டாலும், புதைந்தவர்களை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இந்த ஆண்டின் பருவமழை பல மாகாணங்களில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச் சூடு!

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள்
Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com