தாய்லாந்தில் 9 துறவிகள் உயிரிழப்பு.. டிரக்கர் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன்!

9 Monks Killed in Thailand Crash : தாய்லாந்து நாட்டில் யாத்ரீகர்கள் குழு மீது 11 வயது சிறுவன் பிக்கப் டிரக்கை மோதியதில் ஒன்பது துறவிகள் உயிரிழந்தனர்.

Published on: July 3, 2026 at 10:22 pm

பாங்காங், ஜூலை 3, 2026: தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது துறவிகள் உயிரிழந்தனர். புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் குழுவை, 11 வயது சிறுவன் ஓட்டிய பிக்கப் டிரக் மோதியது. மொத்தம் 35 துறவிகள் இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே ஐந்து துறவிகள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தனர். பதின்மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விபத்து முக்தஹான் மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குப் பொறுப்பான 11 வயது சிறுவன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரசு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுவனை விசாரணைக்கு உட்படுத்துவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சிறுவனின் வயது காரணமாக, விசாரணை சிறுவர் சட்டங்களின் கீழ் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு.. அதிர்ந்த டெல்லி, காஷ்மீர்.. மக்கள் பீதி!

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள் Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடு! Donald Trump

இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்.. ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com