Afghanistan earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு டெல்லியில் உணரப்பட்டது.
Afghanistan earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில அதிர்வு டெல்லியில் உணரப்பட்டது.

Published on: June 28, 2026 at 1:48 pm
காபூல், ஜூன் 28, 2026; ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜூன் 27, 2026 மாலை 7.04 மணிக்கு ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் டெல்லி, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, சந்தீகார் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் உணரப்பட்டன. உடனடி உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், ஜுர்ம் நகரின் தெற்கே 43 கி.மீ. தொலைவில் 215 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, காபூல், பால்க், பதக்ஷான், நங்கர்ஹார், கோஸ்ட் ஆகிய ஆப்கான் மாகாணங்களில் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டன.
இந்தியாவில் தாக்கம்
டெல்லி தேசிய தலைநகர் என்.சி.ஆர் பகுதிகள், டெல்லி, நோய்டா, குருகிராம் பகுதிகளில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைப் பொருத்தமட்டில் பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் பதிவாகின. மேலும் சண்டிகர், பஞ்சாப், ஹரியானா: மக்கள் சில நொடிகள் நில அதிர்வுகளை உணர்ந்து வீடுகளிலிருந்து வெளியேறினர்.
இதையும் படிங்க; பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com