Crude oil: 2026 பிப்ரவரி மே மாதங்களில் பிரென்ட் கச்சா எண்ணெய், 120 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 75 அமெரிக்க டாலராக சரிந்துள்ளது.
Crude oil: 2026 பிப்ரவரி மே மாதங்களில் பிரென்ட் கச்சா எண்ணெய், 120 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் தற்போது 75 அமெரிக்க டாலராக சரிந்துள்ளது.

Published on: June 28, 2026 at 1:28 pm
புதுடெல்லி ஜூன் 28, 2026; பிரென்ட் கச்சா எண்ணெய் விலை $75க்குக் கீழே சரிந்திருப்பது இந்தியாவுக்கு நல்ல செய்தியாகும். இது 2027 நிதியாண்டில் பணவீக்கம் குறைய, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) சுமை தளர, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
விலை சரிவு மற்றும் அதன் தாக்கம்
பிரென்ட் விலை $71–72 வரை குறைந்துள்ளது; இது பிப்ரவரி–மே மாதங்களில் $120 வரை உயர்ந்திருந்ததை ஒப்பிடுகையில் பெரிய சரிவு ஆகும். மேலும், இந்தியா தனது 85–88% கச்சா எண்ணெய் தேவையை இறக்குமதி செய்கிறது. எனவே விலை குறைவு நேரடியாக இறக்குமதி செலவைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார விளைவுகள்
ஒவ்வொரு $1 விலை குறைவுக்கும் இந்தியாவுக்கு வருடாந்திரம் சுமார் ₹4,200 கோடி சேமிப்பு என எதிர்பார்ப்பு கணக்கிடப்படுகிறது. மேலும், எரிபொருள் விலை குறைவதால் போக்குவரத்து, உற்பத்தி, நுகர்வோர் விலை குறையும். தொடர்ந்து நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; கடல் மார்க்கமாக வெளிநாடு செல்லும் இந்திய மாம்பழங்கள்.. விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com