அக்டோபரிலும் எண்ணெய் உற்பத்தியில் மாற்றமில்லை! ஒபெக்+ நாடுகள் முக்கிய முடிவு

OPEC+ Output: உலக சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்திக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்ய OPEC+ கூட்டணி முடிவு செய்துள்ளது.

Published on: September 7, 2026 at 1:43 pm

வியன்னா, செப். 7 2026: ஒபெக்+கூட்டணியின் முக்கிய 7 நாடுகளான சவுதி அரேபியா, ரஷியா, ஈராக், குவைத், கஜகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகியவை காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தின. உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. உலக சந்தையில் தொடர்ந்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதத்திற்கான எண்ணெய் உற்பத்திக் கொள்கையை தற்போதைய நிலையில் தொடர்வது என 7 நாடுகளும் முடிவு செய்தன.

செப்டம்பர் மாதத்தில் ஒபெக்+ நாடுகள் தினசரி சுமார் 1.88 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தன. இதன் மூலம், 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தினசரி சுமார் 16.5 லட்சம் பீப்பாய்கள் தன்னார்வ உற்பத்திக் குறைப்பை படிப்படியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்தது. இதற்கிடையே, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஈரான் தொடர்பான மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பாதித்துள்ளன. இதனால் ஒபெக்+ அமைப்பின் உற்பத்தி தொடர்பான முடிவுகள் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலைகளில் ஏற்படுத்தும் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்த ஆண்டு மே மாதத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. தேசிய நலன் மற்றும் சந்தையின் அவசரத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக UAE தெரிவித்திருந்தது.

உலக எண்ணெய் சந்தையின் நிலவரம் மற்றும் உற்பத்தி அளவுகளை மீண்டும் ஆய்வு செய்வதற்காக ஒபெக்+ கூட்டணி அக்டோபர் மாதத்தில் மீண்டும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கூட்டத்தில் சந்தையின் தேவைகள், உலகளாவிய விநியோக நிலை மற்றும் உற்பத்தி அளவுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 10,000-க்கும் மேற்பட்ட வளையல்கள் ஒரே இடத்தில்! ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழா அறிவித்த விபிஜே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com