6 மாதத்தில் ஆட்சி கவிழுமா? பகல் கனவு காண்கிறார் மு.க ஸ்டாலின்.. விஜயதாரணி அதிரடி!

Vijayadharani: தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஆறு மாதத்தில் கவிழும் என மு க ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

Published on: June 28, 2026 at 1:04 pm

சென்னை ஜூன் 28, 2026; முன்னாள் எம்.எல்.ஏ விஜயதாரணி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியை ஆறு மாதத்தில் கவிழ்த்துவிடும் என தொடர்ந்து பரப்பப்படும் நெருக்கடி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறுவது புதிதாகும்; அதனால் தான் இவ்வாறு நெருக்கடி கொடுக்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும், “தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை; கூட்டணி ஆட்சியை அவர்கள் விரும்பவே மாட்டார்கள். ஆனால், முதலமைச்சர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை கொடுத்து ஆட்சியை திறம்பட நடத்துகிறார்” என வலியுறுத்தினார்.

விஜயதாரணி, “என்னைப் பொறுத்தவரை எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி. இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் சிறப்பாக நடைபெறும். ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும் என்பது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பகல் கனவு” என கடுமையாக விமர்சித்தார். விஜயதாரணியின் இந்த பேச்சு, தமிழக அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க; விஜய்,’ நல்லிணக்க சமூக நீதி’ அரசுக்கு ஆதரவு.. வைகோவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராட்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com