பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!

Australian Girl Killed in Pakistan: பாகிஸ்தானில் விடுமுறைக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுமி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Published on: June 17, 2026 at 12:00 pm

இஸ்லாமாபாத், ஜுன் 17 2026: பாகிஸ்தானில் விடுமுறைக்கு சென்ற ஆஸ்திரேலிய சிறுமி ஹானியா அஹ்மத் (9) போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய-பாகிஸ்தானிய வம்சாவளி

சவுதி அரேபியாவில் ஹஜ் முடித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சக்குவால் மாவட்டத்திற்கு குடும்பத்துடன் சென்ற ஆஸ்திரேலிய-பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஹானியா அஹ்மத், தந்தை அதீல் அஹ்மத் (39), தாய் டாக்டர் சித்ரா கான், சகோதரர் ஆஃபான் (10) ஆகியோர் வாடகை காரில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிமறித்தனர்.

அந்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ஆனால், கொள்ளையர்கள் குடும்பத்தினரின் காரிலேயே தப்பிச் செல்கிறார்கள் என்று தவறாக கருதிய ஒரு போலீஸ் அதிகாரி, அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் ஹனியா அஹ்மத் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மேலும், அவரது தந்தை அதீல் அஹ்மத் மற்றும் சகோதரர் ஆஃபானும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு

இந்த சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து கூட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தனது மகளின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஹனியாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “இச்சூழ்நிலைகள் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும். குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையை அறிய உரிமை உண்டு” எனக் கூறினார்.

ஆஸ்திரேலிய வெளிநாட்டு விவகாரத் துறை (DFAT) குடும்பத்துக்கு உதவி அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களில், குடும்பம் பயணித்த வாகனம் போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் பல குண்டுகள் பாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

பஞ்சாப் போலீசார், கொள்ளையர்களை அடையாளம் கண்டதாகவும், முகமது அப்பாஸ், முகமது ஃபய்யாஸ் எனும் இருவரும் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மற்ற அதிகாரிகள் மீது விசாரணை நடைபெறுகிறது. ஹானியாவின் தந்தை, “முதலில் போலீசாரே துப்பாக்கிச் சூடு நடத்தினர்” என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் மத்திய அமைச்சர் மூனிஸ் இலாஹி, “மரியம் நவாஸ் தலைமையில் CCD-க்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் காரணமாக குற்றவாளிகளை விட பொதுமக்களே பலியாகின்றனர். இது மிகுந்த கவலைக்குரியது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு CCD அமைப்பு 1,100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை ‘என்கவுண்டர்’ எனக் கூறி சுட்டுக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம், “இவை போலியான என்கவுண்டர்கள்; நீதிமன்ற விசாரணை அவசியம்” என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க லண்டனில் இந்திய இளைஞர் குத்திக் கொலை.. போலீசார் விசாரணை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com