கல்லூரி வகுப்பறையில் மாணவி அடித்து கொலை.. மாணவருக்கு ஆயுள் தண்டனை!

Karur College Student Murder Case : கரூரில் 2016ஆம் ஆண்டு கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

Published on: June 16, 2026 at 5:10 pm

மதுரை, ஜுன் 16 2026: 2016ஆம் ஆண்டு கரூரில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில், மாணவி சோனாலி என்பவரை காதலை முறித்துக்கொண்டதால் உதயகுமார் என்ற மாணவர், வகுப்பறையினுள் நுழைந்து மரக்கட்டையால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். கல்வி வளாகத்தில் நடந்த கொடூரச் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு  கரூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மேல்முறையீட்டு வழக்கினை உதயகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்தார். . இந்த வழக்கானது நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் முறையாக எல்லா ஆதாரங்களையும் ஆராய்ந்து, தண்டனை வழங்கி உள்ளது. கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட தேவையில்லை எனக் கூறி, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் மூலம் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனை உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க சவ ஊர்வலத்தில் காரை மறித்து தாக்குதல்… மூதாட்டி உட்பட 5 பேர் காயம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com