Cyber Fraud Awareness Programme : நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.
Cyber Fraud Awareness Programme : நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.

Published on: October 12, 2026 at 5:41 pm
நாகப்பட்டினம், அக். 12 2026: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராமப்புற மக்களிடையே நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பில் ‘அர்தசூத்ரா சம்வாத்’ என்ற நிதி விழிப்புணர்வு நிகழ்ச்சி காமேஸ்வரம் மீனவர் காலனி மற்றும் ஒரத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. கிராமப்புறங்களில் நிதிச் சேர்க்கையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சேமிப்பு, குடும்ப வரவு-செலவுத் திட்டம், பொறுப்பான கடன் மேலாண்மை மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து விளக்கப்பட்டது.
இணையவழி மோசடிகள், போலியான முதலீட்டுத் திட்டங்கள், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள், APK கோப்புகள், வாட்ஸ்அப் மோசடிகள் மற்றும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மிரட்டல்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இணைய மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையக் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. வங்கி விவரங்கள், OTP உள்ளிட்ட ரகசியத் தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஒரத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்தியா ஆரோக்கிய மேரி, கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி மற்றும் SOS குழந்தைகள் கிராம அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சுமார் 75 பெண்கள் கலந்துகொண்டனர். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட அரசுத் திட்டங்கள், சேமிப்பு மற்றும் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட்டது. காமேஸ்வரம் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பெண்கள் பங்கேற்றனர்.
பெண்களின் நிதி சுயசார்பு, கல்வி மற்றும் இணையப் பாதுகாப்பின் அவசியம் குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. கற்றுக்கொண்ட நிதி மேலாண்மை மற்றும் மோசடி தடுப்பு முறைகளை குடும்பத்தினர், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுமாறு பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கிராமப்புறப் பெண்கள் மற்றும் மீனவக் குடும்பங்கள் நிதி சார்ந்த முடிவுகளைப் பாதுகாப்பாக எடுக்கவும், இணைய மோசடிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவும் என பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒரே நேரத்தில் இரட்டை ராக்கெட்.. சென்னையில் ஏவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com