Stanley Hostel Theft: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக 39 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stanley Hostel Theft: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக 39 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: October 7, 2026 at 3:04 pm
சென்னை, அக்.7, 2026: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக 39 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வி.ஸ்வேதா என்பவர் மருத்துவரின் வெள்ளை கோட் அணிந்து கடந்த சில நாட்களாக விடுதிக்குள் சென்று வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விடுதி அறைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் நகைகள் திருடப்படுவதாக மாணவிகள் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், குழந்தைகள் நல மருத்துவத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் 31 வயதான ரஸீனா தனது அறையில் வைத்திருந்த சுமார் 2 சவரன் தங்க நகைகளை ஸ்வேதா திருடியதாக போலீசார் கூறினர். திருட்டுக்குப் பிறகு அவசரமாக விடுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, மருத்துவர் உடையில் இருந்த அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததைத் தொடர்ந்து, அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ரஸீனாவின் நகைகளை திருடியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணையில், ஸ்வேதா மீது ஏற்கனவே 6 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதிக்குள் மருத்துவர் போல வேடமணிந்து பலமுறை நுழைந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விடுதியில் சமீபகாலமாக நடைபெற்ற மற்ற திருட்டுச் சம்பவங்களிலும் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ஸ்வேதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திருடப்பட்ட பொருட்களை மீட்பது மற்றும் அவரது முந்தைய குற்றச் சம்பவங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ரூ.31 கோடி செலவு செய்ததாக பரவும் காணொலி.. ஏ.ஐ மீது குற்றம் சுமத்தும் சத்யபாமா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com