நீட் முறைகேடு.. telegram தற்காலிக தடை.. பரபரப்பு பின்னணி!

Telegram: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ஆம் தேதி வரை தற்காலிக தடை விதித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Published on: June 16, 2026 at 4:58 pm

புதுடெல்லி, ஜுன் 16 2026: நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் (NEET-UG) 2026 மறுதேர்வை முன்னிட்டு மத்திய அரசு, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜூன் 22 வரை டெலிகிராம் பயன்பாட்டை தற்காலிகமாக தடை செய்துள்ளது. இந்த தடை, வதந்திகள், போலியான வினாத்தாள்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி செயல்பட்ட தேர்வு முறைகேடு கும்பல்களை தடுக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பாக, டெலிகிராமின் செய்திகளை பின்னர் திருத்தும் (Message Editing) வசதி மூலம் பழைய பதிவுகளை மாற்றி, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது போன்ற தவறான தகவல்களை பரப்பிய சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வசதியையும் ஜூன் 30 வரை இந்தியாவில் செயலிழக்கச் செய்யுமாறு டெலிகிராமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், டெலிகிராம் சேவையை பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான பயனர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேர்வு முறைகேடுகளை தடுக்கும் கடைசி முயற்சியாகவே இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

மாணவர்கள், NEET தொடர்பான தகவல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ NTA சேனல்கள் மூலமாக மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றச்சாட்டு புகார்கள் cybercrime.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க நாட்டின் பாதுகாப்பு திறன் புதிய உச்சம்.. நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றி

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்! Car Launch

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com