India to Restore Prambanan Temple : இந்தோனேசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு பிரம்பனன் சிவன் கோவிலை இந்தியா புதுப்பிக்க உ்ளளது.
India to Restore Prambanan Temple : இந்தோனேசியாவில் உள்ள 10ஆம் நூற்றாண்டு பிரம்பனன் சிவன் கோவிலை இந்தியா புதுப்பிக்க உ்ளளது.

Published on: July 6, 2026 at 11:33 am
புதுடெல்லி, ஜூலை 6, 2026: இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து, யோக்யகார்த்தாவில் உள்ள பிரபலமான பிரம்பனன் சிவன் கோவிலை (UNESCO உலக பாரம்பரிய தலம்) புதுப்பிக்கும் பணிகளை ஜூலை 8, 2026 அன்று பிரதமர் நரேந்திர மோடி விஜயத்தின் போது தொடங்க உள்ளன. இது இரு நாடுகளின் நாகரிக பிணைப்பை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.
பிரம்பனன் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, இந்தோனேசியாவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவில் தொகுதியாகும். இந்த கோவிலைப் புதுப்பிக்கும் திட்டம், 2025ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இடையே நடந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட உறுதியின் தொடர்ச்சியாகும்.
இரு நாடுகளும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கில், வரலாற்று இணைப்புகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக இதை முன்னெடுக்கின்றன. இந்திய தூதர் சந்தீப் சக்ரவர்த்தி, “இரு தலைவர்களும் சந்திக்கும் போது, புதுப்பிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்” என்று ஜகார்த்தாவில் தெரிவித்தார். இதன் மூலம், இந்தியா–இந்தோனேஷியா உறவுகள் வெறும் அரசியல் வாக்குறுதிகளைத் தாண்டி, நடைமுறை செயல்பாடுகளுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தோனேசியாவின் புவியியல் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் ஹெச்.வி. ஸ்ரிங்லா, மலாக்கா நீரிணை வழியாக தினசரி 22.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து செல்கின்றன என்பதால், இந்தியா–இந்தோனேஷியா உறவு விருப்பம் அல்ல அவசியம்” எனக் குறிப்பிட்டார். மேலும், ஆசியாவின் தொழில்துறை எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய கனிமங்கள் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : பெருவின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com