பெருவின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு : பிரதமர் மோடி வாழ்த்து

Narendra Modi: பெரு நாட்டின் புதிய அதிபராக கெய்கோ புஜிமோரி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: July 4, 2026 at 3:40 pm

புதுடெல்லி, ஜூலை 4, 2026: பெரு நாட்டின் 2026 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கெய்கோ புஜிமோரி (Keiko Fujimori) அதிகாரப்பூர்வமாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்திய பிரதமர், இந்தியா–பெரு உறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி தனது பதிவில், பெரு நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கெய்கோ ஃபுஜிமோரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பெருவுடனான தனது நெருங்கிய நட்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. மேலும், பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன். நமது நாட்டு மக்களின் நலனுக்காக நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்த, உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.

பாப்புலர் ஃபோர்ஸ் கட்சியைச் சேர்ந்த கெய்கோ புஜிமோரி, பெருவின் இடதுசாரி வேட்பாளர் ரொபெர்டோ சான்சஸ் மீது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதி முடிவில் புஜிமோரி சுமார் 50.135% வாக்குகளையும், ரொபெர்டோ சான்சஸ் 49.865% வாக்குகளையும் பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது அவரது நான்காவது அதிபர் தேர்தல் முயற்சியாகும்; முன்னதாக 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அவர் தோல்வியடைந்திருந்தார்.

பெரு தேசிய தேர்தல் நடுவர் அமைப்பு (National Jury of Elections) வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், கெய்கோ புஜிமோரி ஜூலை 28 அன்று அதிபராக பதவியேற்க உள்ளார். இருப்பினும், தேர்தல் முடிவை எதிர்த்து ரொபெர்டோ சான்சஸ் தரப்பு எதிர்ப்புகளை முன்வைத்து வருவதால், அரசியல் பரபரப்பு தொடர்கிறது. அதே நேரத்தில், புதிய அரசுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஆபரேஷன் ராம் மந்திர்.. அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த திருடப்பட்ட நிதி.. உத்தவ் தாக்கரே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com