வந்தாச்சு லலிதா ஜூவல்லரி மார்ட் ஐ.பி.ஓ.. முதலீடு செய்யலாமா? ஒரு பங்கு விலை எவ்வளவு?

Lalitha Jewellery: லலிதா ஜூவல்லரி மார்ட் ஐ.பி.ஓ திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கியது. நிறுவனம் ரூ. 1,700 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

Published on: August 18, 2026 at 3:32 pm

Updated on: August 18, 2026 at 3:33 pm

சென்னை, ஆக.18, 2026: லலிதா ஜூவல்லரி மார்ட் ஐ.பி.ஓ திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கியது. நிறுவனம் ரூ. 1,700 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் ரூ. 1,200 கோடி மதிப்பிலான 5.97 கோடி புதிய பங்குகள் மற்றும் ரூ. 500 கோடி மதிப்பிலான 2.49 கோடி பங்குகள் விற்பனைக்கு (Offer for Sale) விடப்பட்டுள்ளன. விலை வரம்பு ரூ. 190–201 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. IPO ஆகஸ்ட் 19 அன்று முடிவடைகிறது.

முதல் நாளில் IPO முழுமையாக முன்பதிவு செய்யப்படவில்லை. மொத்தத்தில் 0.73 மடங்கு பங்குகள் முன்பதிவு செய்யப்பட்டன. சில்லறை முதலீட்டாளர்கள் 0.77 மடங்கு, என்.ஐ.ஐ.-கள் 0.63 மடங்கு, க்யூ.ஐ.பி-கள் 0.71 மடங்கு முன்பதிவு செய்துள்ளனர். ஊழியர் பிரிவில் மட்டும் 1.58 மடங்கு முன்பதிவு செய்யப்பட்டு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கிரே மார்க்கெட்டில், லலிதா ஜூவல்லரி பங்குகள் வெளியீட்டு விலையை விட 15.3% கூடுதல் விலையில், அதாவது ரூ. 232-க்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது ஒரு லாட் பங்கிற்கு ரூ. 2,294 லாபத்தைக் குறிக்கிறது. இருப்பினும் ஜி.எம்.பி என்பது அதிகாரப்பூர்வ அளவுகோல் அல்ல; சந்தை நிலவரம் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து மாறுபடும்.

முதல் பங்கு வெளியீட்டிற்கான பங்கு ஒதுக்கீடு ஆகஸ்ட் 20 அன்று இறுதி செய்யப்படும் என்றும், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் ஆகஸ்ட் 24 அன்று பட்டியலிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் திரட்டப்படும் நிதியை 10 புதிய கடைகள் அமைப்பதற்கான செலவுகள் (ரூ. 34.55 கோடி), சரக்கு இருப்பு செலவுகள் (ரூ. 998.68 கோடி) மற்றும் பொதுவான நிறுவனச் செலவுகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க : மின்-கட்டமைப்பு இணைப்பு உரிமை இழப்பு இல்லை.. சூரிய, காற்றாலை திட்டங்களுக்கு நிவாரணம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com