Madras High Court: 21 அ.தி.மு.க MLA-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவில் என்ன தவறு என சென்னை ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.
Madras High Court: 21 அ.தி.மு.க MLA-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவில் என்ன தவறு என சென்னை ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.

Published on: August 18, 2026 at 4:02 pm
சென்னை, ஆக.18, 2026: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
கடந்த மே 13ஆம் தேதி நம்பிக்கை தீர்மானத்தில் தி.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறி, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அந்த 25 பேரில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நிலையில், மீதமுள்ள 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். சபாநாயகர் அதனை ஏற்று, தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டார்.
இதனை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், “கொறடா உத்தரவை மீறியவர்களை மன்னிக்க அரசியல் கட்சிகளுக்கு அதிகாரமில்லை. அவர்களின் மன்னிப்பை ஏற்று தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டது அரசியல் சாசனத்தின் கேலிக்கூத்து” என வாதிட்டார்.
அதற்கு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “இது கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்சனை. பொதுச்செயலாளர் மன்னித்ததால் அவர்கள் மீண்டும் கட்சி உறுப்பினர்களாகவே செயல்படுகின்றனர். மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது” என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், “மன்னிப்பு அளிக்கப்பட்டதால் அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர். சட்டப்படி 15 நாட்களில் மன்னித்து தகுதி நீக்க நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது?” என கேள்வி எழுப்பினர். தற்போதைய நிலையில் எந்தக் கட்சித் தாவல் நடவடிக்கையும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : ‘ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என பெயர் வைக்க சொன்னோம்.. சட்டப்பேரவையில் எ.வ வேலு பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com