2027 கிரிக்கெட் உலகக் கோப்பை.. வெளியான அட்டவணை.. முழு விவரம்!

2027 ODI World Cup Schedule: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Published on: October 2, 2026 at 6:29 pm

புதுடெல்லி, அக்.2, 2026: 2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில் 14 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 57 போட்டிகள் நடைபெறும் நிலையில், புதிய போட்டி வடிவம் அணிகளுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது.

நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள், சாம்பியன் பட்டத்தை வெல்ல 13 போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும். முதலில் 5 குரூப் போட்டிகள், பின்னர் சூப்பர் 7 சுற்றில் 6 போட்டிகள், அதன்பிறகு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குரூப் சுற்றில் 6 அணிகள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், இரு குழுக்களிலும் அடுத்த சிறந்த அணியும் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும். குறிப்பாக, குரூப் சுற்றில் பெற்ற புள்ளிகள் சூப்பர் 7 சுற்றுக்கு எடுத்துச் செல்லப்படாது என்பதால், அனைத்து அணிகளும் மீண்டும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்திய அணிக்கும் ஆரம்ப கட்டத்திலேயே கடும் சவால் காத்திருக்கிறது. அக்டோபர் 7ஆம் தேதி கேப்டவுனில் ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 10ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது. அதன்பிறகு ஆப்கானிஸ்தானுடன் போட்டி நடைபெறுகிறது. தொடக்கப் போட்டிகளில் ஏற்படும் பின்னடைவுகள் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மூன்று நாடுகளில் உள்ள 12 மைதானங்களில் சுமார் ஆறரை வாரங்கள் நடைபெறும் இந்தத் தொடரில், அணிகளுக்கு பயணம் மற்றும் தொடர்ச்சியான போட்டிகள் காரணமாக உடல் சோர்வும் முக்கிய சவாலாக இருக்கும். 2023 உலகக் கோப்பையில் சாம்பியனை தீர்மானிக்க 9 போட்டிகள் போதுமானதாக இருந்த நிலையில், 2027 தொடரில் நேரடியாக தகுதி பெறும் அணிகள் பட்டத்தை வெல்ல 13 போட்டிகள் வரை விளையாட வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 117 பந்துகளில் அதிவேக இரட்டை சதம்.. புதிய சாதனை படைத்த சுப்மன் கில்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com