Anbumani Ramadoss: “10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss: “10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Published on: August 18, 2026 at 4:13 pm
சென்னை, ஆக.18, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம், மராட்டியம் உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தவெக ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள். அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என பெயர் வைக்க சொன்னோம்.. சட்டப்பேரவையில் எ.வ வேலு பரபரப்பு பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com