என் வீட்டுத் தென்னை..எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்.. விசிக மீது ஆ. ராசா விமர்சனம்

A Raja : தவெக தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகள் இடம் பெற்றுள்ளது குறித்து ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.

Published on: May 22, 2026 at 3:46 pm

சென்னை, மே 22 2026: தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வி.சி.க. சார்பில் வன்னி அரசு மற்றும் ஐ.யு.எம்.எல். சார்பில் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆ.ராசா தனது எக்ஸ்தள பதிவில், விசிக மற்றும் ஐயுஎம்எல் தவெக அரசுடன் இணைந்ததை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில் பெண்கள் குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக கடும் விமர்சனம் எழுந்தநிலையில் அந்த பதிவை நீக்கினார்.
இந்நிலையில், மீண்டும் மற்றொரு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,
“என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் முடத்தெங்கு. அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!”
என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு, திமுக கூட்டணியில் இருந்த வி.சி.க. மற்றும் ஐ.யு.எம்.எல். கட்சிகள், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவைப் பொறுப்பு பெற்றதைக் குறிவைத்து வெளியிடப்பட்டதாக கூறி கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் தங்களது கட்சி தவெக அரசில் அமைச்சரவை பிரதிநிதித்துவத்துடன் இடம்பெறும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் திமுக மற்றும் வி.சி.க. ஆதரவாளர்கள் இடையே கடும் கருத்து மோதல்கள் வெடித்தது.

இந்நிலையில், ஆ.ராஜாவின் கருத்துக்கு பதிலளித்த தவெக, கூட்டணி கட்சிகளை அவமதிக்கும் விதமாக அவர் பேசியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக அரசியலின் அடிப்படை கோட்பாடு என்றும், அதை இழிவுபடுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஒவ்வாதது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமைச்சரவையில் விசிக.. வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com