அரசியல் முடிவை தீர்மானிக்கும் உரிமை உண்டு.. கழக தோழர்கள் கடுஞ்சொற்கள் பேச வேண்டாம்.. மு.க ஸ்டாலின்

Stalin Urges DMK Comrades: கழக தோழர்கள் கடுஞ்சொற்கள் பேச வேண்டாம் என தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Published on: May 22, 2026 at 8:54 pm

சென்னை, மே 22, 2026: “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு எனத் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், “மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசு மற்றும் ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் அறிவுரை

தொடர்ந்து, “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா, கருணாநிதி வழி

மேலும், “பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒரு கல்குவாரி கூட விட்ராதீங்க.. அமைச்சர் பிரபு உத்தரவு.. அலறும் அதிகாரிகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com