SelvaPerunthagai : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வெளியேற உள்ள நிலையில் செல்வப் பெருந்தகை தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
SelvaPerunthagai : காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வெளியேற உள்ள நிலையில் செல்வப் பெருந்தகை தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

Published on: June 27, 2026 at 5:31 pm
சென்னை ஜூன் 27, 2026; “சட்டப்பேரவையில் விஜயின் செய்கை அருவருக்கத்தக்கது அவமானகரமானது எனக் கூறியுள்ள செல்வப் பெருந்தகை, திமுக தலைவர் மு க ஸ்டாலின் வரலாறை யாரும் மறக்கவும் மறக்கவும் முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சட்டப்பேரவையில் விஜயின் செய்கை அருவருக்கத்தக்கது, அவமானகரமானது எனக் கூறிய காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரலாறை யாராலும் மறக்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செல்வப் பெருந்தகை, திமுகவுடன் நெருக்கம் காட்டியவர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என காங்கிரஸின் சில தலைவர்கள் வலியுறுத்திய நிலையில், அவர் திமுகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இந்தச் சம்பவம், தமிழக அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது; பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com