தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.. உடனடி அமல்.. செல்வப் பெருந்தகை என்ன ஆனார்?

TN New Congress Leader : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக, விருதுநகர் மக்களவை எம்பி மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Published on: June 27, 2026 at 6:27 pm

Updated on: June 27, 2026 at 6:39 pm

சென்னை ஜூன் 27 2026; தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு புதிய தலைவராக விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்; அதன்படி, தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடி அமலுக்கு வருகிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் தலைமை மாற்றம் குறித்து தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக, செல்வப் பெருந்தகையின் மகள் திருமணம் ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் பின்னர் தலைமை மாற்றம் செய்யப்படலாம் என்ற அரசியல் வட்டாரச் செய்திகள் பரவலாக பேசப்பட்டன. அந்த ஊகங்கள் இப்போது நிஜமாகியுள்ளன.

மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், விருதுநகர் மக்களவை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவமிக்க எம்பியாகவும் உள்ளார். கட்சியின் உள்நிலை விவகாரங்களில் தீவிரமாக செயல்பட்டவர் என்பதால், அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

செல்வப் பெருந்தகை, திமுகவுடன் நெருக்கம் காட்டியவர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், அவரை மாற்றியிருப்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்கால கூட்டணி நிலைப்பாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில், மாணிக்கம் தாகூரின் தலைமையில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு செயல்படும் என்பது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக கவனிக்கப்படும்.

இதையும் படிங்க மு.க. ஸ்டாலின் வரலாறை மறுக்க முடியாது.. கொதித்தெழுந்த செல்வப் பெருந்தகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com