Madurai: இந்திய ராணுவ கொடிநாள் நிதியாக தன் வாழ்நாள் சேமிப்பு பணமாக ரூ.60 லட்சத்தை முதியவர் ஒருவர் வழங்கியுள்ளார்.
Madurai: இந்திய ராணுவ கொடிநாள் நிதியாக தன் வாழ்நாள் சேமிப்பு பணமாக ரூ.60 லட்சத்தை முதியவர் ஒருவர் வழங்கியுள்ளார்.

Published on: August 11, 2026 at 1:54 pm
மதுரை, ஆக.11, 2026: மதுரை ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்த 82 வயதான முதியவர் சுப்பையா, தனது வாழ்நாள் சேமிப்பான 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளை இந்திய ராணுவத்தின் கொடி நாள் நிதிக்காக உயில் ஆவணமாக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளார்.
மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இல்லாததால் தனியாக வாழ்ந்து வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற குறைதீர் முகாமில், தனது வங்கி கணக்கில் உள்ள ரூ.30 லட்சம் டெபாசிட் தொகையும், வங்கி லாக்கரில் உள்ள 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் ராணுவ வீரர்களுக்காக வழங்கும் உயில் ஆவணத்தை ஒப்படைத்தார்.
மேலும், பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இதற்கு முன்னதாக, தனது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ கல்லூரிக்கு தானமாக எழுதி வைத்திருந்தார். அவரது இந்தச் செயலை பாராட்டும் வகையில் அங்கிருந்த அரசு அதிகாரிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சுப்பையா, “எனக்கு குடும்பம் இல்லை. நமது நாட்டை காப்பாற்றுவது ராணுவம் தான். அவர்களுக்கு நிதி அளிப்பது எனக்கு மனநிறைவை தருகிறது. வங்கி விதிமுறைகள் காரணமாக நேரடியாக வழங்க முடியாததால் உயில் ஆவணமாக ஒப்படைத்தேன். மாதந்தோறும் வரும் வட்டி பணத்தையும் ராணுவத்திற்காக வழங்குவேன்” என்று கூறினார்.
அவர் மேலும், “நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய சேமிப்பில் இருந்து குறைந்தபட்சம் ஒரு சதவீதத்தை ராணுவத்திற்காக வழங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட வேண்டும். ராணுவ வீரர்கள் நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க : தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் மிகப்பெரிய சரிவு.. சிட்டி பெண்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com