Breast milk: ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசிக்கும் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Breast milk: ஹைதராபாத் போன்ற நகரங்களில் வசிக்கும் இளம் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published on: August 10, 2026 at 11:50 am
Updated on: August 10, 2026 at 12:04 pm
ஹைதராபாத் ஆகஸ்ட் 10, 2026; தெலங்கானாவில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் குறைந்து வருவது கவலைக்குரிய நிலையாக மாறி வருகிறது; என்.எஃப்.ஹெச்.எஸ் (NFHS)-6 (2023-24) தரவின்படி, ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் 64.8% ஆகக் குறைந்துள்ளது. மருத்துவர்கள், பிரசவத்திற்குப் பிறகு போதுமான வழிகாட்டுதல் இல்லாமை, தவறான தகவல்கள் மற்றும் வாழ்க்கை அழுத்தங்கள் இதற்குக் காரணம் எனக் கூறுகின்றனர்.
ஹைதராபாத் போன்ற நகரங்களில், மருத்துவமனைகளில் தாய்ப்பால் கொடுப்பதில் பெண்கள் நன்றாக இருந்தாலும், வீடு திரும்பிய பின், போதிய ஆதரவு இல்லாததால் சிரமம் அதிகரிக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மருத்துவர் ராஜீவ் சாந்தோஷ், “மருத்துவமனையில் நன்றாக இருந்தாலும், வீட்டில் தனியாக இருக்கும் போது தாய்மார்கள் சிரமப்படுகிறார்கள்” எனக் கூறினார்.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பானி ஜோத்ஸ்னா, பிரசவத்திற்குப் பிறகு தொடர்ச்சியான ஆலோசனை இல்லாமையே மிகப்பெரிய குறைபாடு என வலியுறுத்துகிறார். மேலும் நகர வாழ்க்கை, தனி குடித்தன அமைப்பு, வேலைக்கு விரைவில் திரும்ப வேண்டிய நிலை ஆகியவை தாய்ப்பால் கொடுப்பதை சிரமமாக்குகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் கிராமங்களில் குடும்ப ஆதரவு கிடைப்பதால் விகிதம் அதிகமாக இருக்கிறது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
இதையும் படிங்க; இதய ஆரோக்கியம் எளிது.. இயற்கை உணவில் கவனம்.. பிரபல மருத்துவர்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com